மானியடத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

மானியடத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவற்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்தும், தொழில்முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்டஅறிக்கை தயார் செய்து இலவச ஆலோசானைகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) முற்றிலுமான விலக்கு அளிக்கப்படும்.

உடற்பயிற்சி சிகிச்சை (Physiotheraphy) பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். உடற்பயிற்சி சிகிச்சை (Physiotheraphy) பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ.6.00 இலட்சம் திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35% அல்லது அதிகபட்சம் ரூ.2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பயனாளிகள் 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதள www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி-620001. (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision