வாங்க வாங்க எங்ககிட்ட வாங்க வட்டியில்லா கடன் வாங்க !!
திருச்சி மாவட்டத்தில் பராமரிப்புக்கடன் வழங்கப் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட் டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், மாற்றுத்திறனாளி கடன், சுய உதவிக்குழு கடன், கறவை மாடு, ஆடு வளர்ப்பு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடப்பாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் லாம். 31ம் தேதி வரை 41 ஆயிரத்து 10 விவசாயிகளுக்கு ரூபாய் 355,47 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.இதே காலகட்டத்தில், 11 ஆயிரத்து 497 விவசாயிகளுக்கு ரூபாய் 47.69 கோடி, வழங்கப்பட்டுள்ளது கடன் தேவைப்படும் விவசாயிகள் நில உரிமை தொடர்பான கணினி சிட்டா, விஏஓ சான்று, அடங்கல் சான்று, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயன்பெறலாம்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூபாய் 110 பங்குத் தொகை செலுத்தி, உறுப்பினளராக இணைந்து விண்ணப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெறலாம். சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லறை விற்பனை மூலமும் பெற்றுக்கொள்ளலாம்,
கடன்பெறுவதில் குறைபாடுகள் இருந்தால், திருச்சி சரக துணைப்பதிவாளரை 7338749302 என்ற எண்ணிலும், லால்குடி சரக துணைப் பதிவாளரை 7338749303 என்ற எண்ணிலும், முசிறி சரக துணைப்பதிவாளரை 7338749304 என்ற எண்ணிலும், திருச்சி மண்டல இணைப்பதிவாளரை 7338749300 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.