கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டிய காவலர் கைது - மாவட்ட எஸ்பி நடவடிக்கை

கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டிய காவலர் கைது - மாவட்ட எஸ்பி நடவடிக்கை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீலைபிள்ளையார் புதூர் மாரியம்மன் கோவில் தெருவில் காவல்துறையின் வாகனத்தை ஒட்டிய காவலர் கட்டுப்பாட்டை இழந்து ஆறு இரு சக்கர வாகனங்களில் மோதி சென்றது. பின்னர் தெருவில் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானர்.

இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவல்துறை வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதால் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்து அவர் உடலை மீட்டனர். காவல்துறையின் வாகனத்தை ஓட்டிய காவலர் போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான காவல்துறை வாகனத்தை சதீஷ் சென்ற காவலருக்கு ஓட்டுனர் பணி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விபத்தை ஏற்படுத்திய காவலர் லோகநாதன் எதற்காக வாகனத்தை ஓட்டினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய காவலர் லோகநாதன் மீது 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக வாகனத்தை இயக்கிய காவலர் லோகநாதனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த காவலர் வாகனத்தை இயக்கும் பணி வழங்கப்படவில்லை. ஆனால் எதற்காக இவர் காவல் வாகனத்தை ஓட்டினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிரடிப்படையினர், வஜ்ரா வாகனங்கள் ஆகியவை பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision