திருச்சியில் பாம்பு பிடித்த கவுன்சிலர்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டு காட்டூர் அம்பேத்கர் நகர் மூன்றாவது தெரு பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ன. இந்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அச்சம் அளிக்கும் வகையில் வீடுகளுக்குள் புகுந்த கடும் விஷம் கொண்ட 6அடி நல்ல பாம்பை பிடிப்பதற்கு அப்பகுதி மக்கள் முயற்சி செய்தும் முடியாத பட்சத்தில் 43 வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரிடம் முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து செந்தில்குமார் நேற்று இரவு கல் கண்டார் கோட்டை பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து புதர் மண்டிய பகுதியில் இருந்த நல்ல பாம்பை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள இவர் மண்டிய பகுதியை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்தார்.
இதனால் ஒரு வார காலமாக அச்சத்தில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர் துரிதமாக நடவடிக்கை எடுத்து பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்த கவுன்சிலர் செந்தில்குமாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn