போலி ஆவணம் தயாரித்த வழக்கில் தேமுதிக நிர்வாகி கைது.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த லட்சுமணன் மகன் ஞானசேகர் (54). இவர் ஆவண எண் 334 / 1986 படி கிரையம் பெற்ற 4327 சதுரஅடி பரப்பு கொண்ட காலிமனையை ஜெயராமன் என்பவருக்கு கிரயம் செய்து கொடுப்பதற்கு தன்னுடைய ஆதாரம் தொலைந்து விட்டதாகவும், இதுகுறித்து ஞானசேகர் முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசாரால் வழங்கப்பட்ட என்.டி.சி சான்றை பெற்று சம்பந்தப்பட்ட காலியிடத்தை ஜெயராம் என்பவருக்கு கிரயம் செய்ய ஞானசேகர் முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது ஆவணங்களை கொடுத்துள்ளார். அப்போது 334 / 1986 ஆவண குறிப்பு வழிகாட்டு பதிவேட்டில் முசிறி சார்பதிவாளர் சரிபார்ததில், ஞானசேகரன் த/பெ பழனியாண்டி என்று மாற்றம் செய்திருப்பதாகவும்,
ஞானசேகர் தனது தந்தையின் பெயரை மாற்றி போலி ஆவணம் தயாரித்து பத்திரம் பதிவு செய்ய முயற்சித்துள்ளார் என்று முசிறி சார்பதிவாளர் கோகிலா முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கதிரேசன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு ஞானசேகர் (54), பத்திர எழுத்தர் பாலசுப்ரமணி (57), அசோக்குமார்(47) ஆகிய மூவரை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து மேல்விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் இவ்வழக்கில் முசிறி ஆணைப்பட்டி சேர்ந்த பெருமாள் மகன் ஜெயராமன் (33) இவர் (தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்) உடந்தையாக இருந்தது தெரிய வந்து அவரை கைது செய்தனர்.
முசிறி சார்பதிவாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்...... நிலம் மற்றும் வீட்டுமனைகளை வாங்கவும் விற்கவும் இடைத்தரகர்களை பயன்படுத்தும்போது சில இடை தரகர்கள் போலி ஆவணங்களை தயார் செய்து பொதுமக்களை ஏமாற்றி பெரும் பணம் சம்பாதிப்பது சமீப காலமாக பெருத்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பலர் பணத்தை இழந்தும் நீதிமன்றம் வாயிலாக வழக்கை நடத்தியும் மன உளைச்சல் உண்டாகி வருகின்றனர். பொதுமக்கள் நிலம் மற்றும் வீட்டு மனைகளை வாங்கவோ விற்கவோ இடைத்தரகர்களை தவிர்க்கவும் பத்திரம் சம்பந்தமான எவ்வித தகவலையும் நேரடியாக சார் பதிவாளர் அலுவலகம் வந்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் அறிவுரை கூறினார் எந்த ஒரு நிலம் வீட்டு மனைகள் வாங்கும் போதும்கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision