டெங்கு காய்ச்சல் - திருச்சியில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்

டெங்கு காய்ச்சல் - திருச்சியில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்

கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தான். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்களை ஒழிக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிர மாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச் சல் "ஏடிஸ்" என்ற ஒரு வகையான கொசு மூலம் பரவுகிறது. எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையினர் வேண்டுகோள். விடுத்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற திருச்சி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டில் முன்னேற்பாடு பணிகளை அரசு மருத்துவமனை முதல்வர் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

திருச்சியில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாரும் அனுமதிக்கப்பட வில்லை. இருப்பினும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக இங்கு 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்கும், தலா 20 படுக்கைகள் குழந்தைகள், பெரியவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. படுக்கையில் கொசுவலைகள் கட்டப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவு ரத்த அணுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான மருந்துகளும், டெங்கு காய்ச்சலை சரி செய்வதற்கான மாத்திரைகள். ஊசிகள் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளன. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision