வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தேநீர் கடைகார்கள்

வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தேநீர் கடைகார்கள்

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் டீக்கடை மற்றும் டாஸ்மார்க் உள்ளிட்ட சில கடைகள் நேர கட்டுப்பாடுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் மட்டும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

நேற்று டீக்கடை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு திருச்சி மாநகரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பார்சலுக்கு மட்டும் அனுமதி என்று அறிவிப்பு உள்ள நிலையில் டீ பிரியர்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்சல் டீ- களை பிளாஸ்டிக் பைகளில் வழங்கக்கூடாது என்றும், கடைகளில் நின்று டீ குடிக்க  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து டீ மாஸ்டரான கண்ணன் கூறுகையில்... டீ கடை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்க இருப்பதால் மீண்டும் நாங்கள் பணிக்கு வந்துள்ளோம். ஆனால் காலையில் இருந்து பார்சல் டீ வாங்க யாரும் வராததால் வாடிக்கை எதிர்பார்த்துக் நாங்கள் காத்துக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இழந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய எங்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve