சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்ட டாஸ்மாக்

சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்ட டாஸ்மாக்

கொரோனா முழு ஊரடங்கு இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த டீ கடை மற்றும் டாஸ்மாக் நேர கட்டுப்பாடுடன் இன்றும் முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி டீ கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டுமென ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடை வரும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் தீவிரமாக செய்துவந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட்டது. மது வாங்க வருபவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு அவர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்தனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வரிசையில் நிற்கும் மது பிரியர்களுக்கு வசதியாக சாமியான பந்தல் போடப்பட்டுள்ளது. இது போன்ற சிறப்பான ஏற்பாடுகளுடன் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்டது மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்து தருவார்களா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பிகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve