தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்மலிட், கும்பகோணம் சார்பில், தொடர் விடுமுறை நாட்களுடன் ஆங்கில புத்தாண்டும் சேர்ந்து வருவதால் பயணிகளின் வசதிக்காக (29.12.2023) முதல் (02.01.2024) வரை சிறப்பு பேருந்து இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(30.122023) (சனி), (31.12.2023) (ஞாயிறு) ஆகிய இரு நாட்கள், வார விடுமுறையுடன் (01.01.2024) (திங்கள்) ஆங்கில புத்தாண்டு என தொடர் 3 நாட்கள் விடுமுறை தொடர்ச்சியாக சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களிலிருந்து வேளாங்கண்ணி மற்றும் அனைத்து ஊர்களுக்கும், மீண்டும் பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல (01.01.2024) மற்றும் (02.01.2024) (திங்கள், செவ்வாய்) நாட்களில் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை காரைக்குடி, இராமநாதபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்துகளும்,
கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், ஆகிய ஊர்களிலிருந்து கோவை, மதுரை, திருப்பூர்க்கும் மற்றும் தஞ்சாவூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும் என சிறப்பு பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பி செல்ல (01.01.2024) (திங்கள்) மற்றும் (02.01.2024) (செவ்வாய்) ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும்,
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர். மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் திரும்ப செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் wwwinsteinஇணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android/ I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய் து கொள்ளலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision