திருச்சியில் சாலையில் புழுதி புகை- வாகன ஓட்டிகள் திணறல்

திருச்சியில் சாலையில் புழுதி புகை-  வாகன ஓட்டிகள் திணறல்

திருச்சி பாலக்கரை சப் ஜெயில் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. பணிகளுக்காக வெட்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு தற்பொழுது சாலைகள் போடும் முன் அதில் சிறிய ஜல்லிகள் மற்றும் கிராவல் அடிக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில் அந்த சாலையில் தான் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் காய்கறி லாரி ,வேன்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் சில வெங்காய மண்டி கடைகளும் செயல்பட்டு வருகிறது. பேருந்துகள் லாரிகள் செல்லும் பொழுது பின்னே செல்லும் இருசக்கர வாகனங்கள்

மற்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதி புகை பறக்கிறது. அப்பகுதியில் உள்ள  வெங்காயம்,தக்காளி உள்ளிட்டவைகளை மீது அதிக அளவு தூசிப் படிந்து காணப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தியும் இன்னும் அப்பகுதியில் சாலை போடப்படவில்லை.  காரணம் என்ன கேட்ட பொழுது அவர்களுக்கு முறையான பதிலும் வரவில்லை என்று குறிப்பிடுகின்றனர். உடனடியாக அப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து புழுதி புகையிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும்..விபத்தை தடுத்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள  அச்சாலையை பயன்படுத்துவர்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்து இருப்பவர்கள்  புதிய சாலை அமைத்து தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision