செஸ் ஒலிம்பியாட் லோகோவை ரங்கோலியில் வரைந்து அசத்திய கலைக்காவிரி கல்லூரி மாணவ,மாணவிகள்
திருச்சி கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியில் சர்வதேச ஒலிம்பிக் தினமான இன்று 20.07.22 வருகின்ற 28.07.22 அன்று சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் செஸ் போட்டியை முன்னிட்டு அதன் இலச்சினையை ரங்கோலி முறையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடனத்துறை மாணவி தருணிகா தலைமையில் ஐஸ்வர்யா, வெரோனிகா உள்ளிட்ட மாணவிகள் சிறப்பாக வரைந்தனர். இவர்களுக்கு துணையாக மாணவ மாணவியர்கள் துணை நின்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரியில் செயலர் அருள் பணி. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் ஒருங்கிணைத்தார் அவர் தலைமையில் சர்வதேச ஒலம்பிக் செஸ் போட்டிகள் குறித்து உறுதி மொழி ஏற்றனர்.
உடன் சமஸ்கிருத உதவிப் பேராசிரியர் முனைவர் இல.கோவிந்தன், மிருதங்கத்துறை உதவிப் பேராசியர் S.T.மூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO