திருச்சியில் மாநில அளவிலான கபடி போட்டி தொடக்கம்

திருச்சியில் மாநில அளவிலான கபடி போட்டி தொடக்கம்

கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக திருச்சி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி தொடங்கியது. தொழிலதிபர் கே.என்.அருண் நேரு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையிலை வகித்தார்.

சென்னை, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்திலிருந்து 34 கபடி குழு விளையாட்டு வீரர்களை தொழிலதிபர் அருண் நேரு வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு இரண்டு லட்சமும், இரண்டாம் பரிசு 1,50,000, மூன்றாம் பரிசு ஒரு லட்சத்து 25 ஆயிரம், நான்காம் பரிசு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாவட்ட பொருளாளர் தர்மன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை சரவணன் வீரபத்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் அசோகன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகளாக அம்பிகாபதி மயில்வாகனன் கனகராஜ் பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை திருச்சி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision