திருச்சி மாவட்டத்தில் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

திருச்சி மாவட்டத்தில் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. 8570 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர் - தேர்வு மையங்களில் ஒன்றான திருச்சி காஜமலை அருகே உள்ள சமது மேல் நிலை பள்ளியில் மாணவர்கள் சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வானது நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் இதற்காக, ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, சாரநாதன் கல்லூரி, சமது மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 8 ஆயிரத்து 570 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இத்தேர்வானது நடைபெற உள்ளது. தமிழ் இங்கிலீஷ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது பதற்றம் இல்லாமல் இருக்க முன்கூட்டியே மாணவ மாணவிகள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது

தேர்வு அறைக்குள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் .

மேலும் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எந்தப்பொருளையும் எடுத்துவரக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. அதற்கேற்றவாறு மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்தனர். 

 

திருச்சி காஜா நகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 554 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த தேர்வு மையத்தில் காலை10 மணி முதலே மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர்.

பெரும்பாலானவர்கள் தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர். நீட் தேர்வு எழுதுவதற்காக வெயிலையும் பொறுப்போடுத்தாமல் வரிசையில் நின்று தேர்வு மையத்திற்கு உள்ளே செல்கின்றனர்.

மாணவ மாணவிகளின் ஹால் டிக்கெட் சோதனை செய்து சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றுமாறு தேர்வு மையத்தினர் கூறியதையடுத்து மாணவிகள் அதனை அகற்றி தங்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சரியாக 1.30 மணிக்குள் அனைவரும் தேர்வு மையங்களுக்குள் சென்றுவிட வேண்டும். 2 மணிக்கு தேர்வு தொடங்கியது.

திருச்சியில் மொத்தம் 8570 பேர் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர்  இன்று 8283 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர்.287 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision