வெப்ப காலத்தில் டயர் வெடித்து விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
கோடை வெப்பத்தில் வறண்டுபோய் வலிமையை இழப்பது நாம் மட்டுமல்ல நம் வாகனங்களும்தான். நம்மைத் பாதுகாத்துக்கொள்ள பருத்தி ஆடை அணிவது, இளநீர், நார்ச் சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது எனப் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். அதே போல கோடைக்காலத்தின் வெப்பத்திலிருந்து நம் கார்களை பாதுகாப்பது குறித்து எம் ஏ டயர்ஸ் மேனேஜிங் பார்ட்னர் ஆபிரகாம் பகிர்ந்து கொண்டவை,
காரில் அதிகம் கவனிக்கப்படாத பாகங்களில் டயரும் ஒன்று. பலபேருக்குத் தங்கள் காரின் மேனுவலில் கொடுக்கப்பட்டுள்ள டயர் பிரஷர் என்ன என்பதே தெரியாது. கோடைக்காலத்தில் டயரில் காற்று குறைவாக இருந்தால் டயரின் தேய்மானம் அதிகமாக இருக்கும். குறைந்த பிரஷருடன் கொதிக்கும் சாலையில் சென்றால் சாஃப்ட்டான பக்கவாட்டுப்பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டு டயர் வெடிக்கும் சூழலும் ஏற்படும். பிரஷர் அதிகமாக இருந்தால் டயரின் நடுப்பகுதி தேய்ந்து கிரிப் குறையும். காற்று, வெப்பம் அதிகரிக்கும்போது விரிவடையும் தன்மை கொண்டது. இதனால், வெயிலில் காரை ஓட்டிவிட்டு டயர் பிரஷரை செக் செய்யக் கூடாது. காலை வேளையில் டயர் பிரஷரை சரிபார்ப்பது நல்லது. வீல் அலைன்மென்ட்டிலும் ஒரு கண் தேவை. வீல் அலைன்மென்ட் சரியில்லை என்றால் டயர் அதன் இஷ்டம்போல் தேயும்.
வாகனங்களில் உள்ள டயர்களில் சரியான காற்று அளவு இருக்கவேண்டும். சரியான அளவு காற்று இருந்தால் டயர் தேய்மானம் குறையும், மைலேஜ், திறன் மற்றும் சிறந்த டிரைவிங் கிடைக்கும். வாரம் ஒரு முறையாவது டயர்களில் உள்ள காற்று அளவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவேண்டும்.
வாகனங்களை தேவையில்லாமல் அதிக வேகமாகவோ அல்லது ஆப் ரோடிங் போன்றவற்றை செய்யக்கூடாது. அதிக வேகம் ஓட்டினாலும் அல்லது அதிக ஆப் ரோடிங் செய்தாலும் வாகனங்களில் உள்ள டயர் அதிக தேய்மானம் நடக்கும்
அதிகக் காற்றைவிட குறைந்த காற்று இருப்பதுதான் டயருக்கு ஆபத்து. டயரில் குறைந்த காற்று இருக்கும்போது சாலையுடனான உராய்வினால், ஓவர் ஹீட் ஆகி டயர் வெடிக்கும். அதனால், எப்போதுமே தேவையைவிட 4-5 புள்ளிகள் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. குறைவாக இருக்கக் கூடாது.
இன்று வெயில் அதிகமாக இருக்கிறது. 30 பிஎஸ்ஐ-க்கு பதில் 25 பிஎஸ்ஐ நிரப்பினாலே போதும் என்பதை எல்லாம் நம்பத் தேவையில்லை அது சரியாக கவனிக்க வேண்டும்.
வெயில் காலத்தில் ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்துவது சிறந்தது அதே போன்ற டியூப்லஸ் டயர்களை பயன்படுத்துவதில் சிறந்தது.
டயரின் ஓரங்களில் பஞ்சர் இருந்தால் உடனடியாக டயர்களை மாற்றுவது சிறந்தது.ஒரு டயர் ஆயுள் காலமானது ஆறு ஆண்டுகள் ஆகும் அதன் தயாரிப்பு தேதியிலிருந்து ஆறு ஆண்டுகள் அதனை பயன்படுத்தலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision