ஒற்றைத்தலைமை எடப்பாடி ஏற்க வேண்டும் என திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பேட்டி

ஒற்றைத்தலைமை எடப்பாடி ஏற்க வேண்டும் என திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பேட்டி

திருச்சி  முன்னாள்  எம்பியும், அதிமுகவின் திருச்சி  தெற்கு மாவட்டம் செயலாளருமான ப.குமார் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்....ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம்.75 எம்.எல்.ஏக்களுடன் அ.தி.மு.க ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அ.தி.மு.க வில் இரண்டு கோஷ்டிகளாக செயல்படுகிறது. தி.மு.க வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்கள் ஒரு பக்கமும் கடுமையான போக்கை கடைப்பிடிப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். அ.தி.மு.க விற்காக உழைக்க கூடியவர்கள் ஒரு பக்கமும் ஒட்டுத்திண்ணையில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர் என தெரிவித்தார்.

நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் மொழிய, வழி மொழிய ஆதரவு இல்லாதவர்களுக்கு அ.தி.மு.க தலைமை பதவியை அறிவிக்கிறது. இதனை யாராவது கண்டித்தால் அவர் அடுத்த அணிக்கு சென்று விடுகிறார்.கோஷ்டி அரசியல் அ.தி.மு.கவிற்கு பின்னடைவை உருவாக்கும். அ.தி.மு.க மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. கட்சியை புத்துணர்ச்சியோடும் எழுச்சியோடும் வீறுநடை போட வேண்டி உள்ளது.

ஈ.பி.எஸ் தி.மு.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். அ.தி.மு.க விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தான் கடை கோடி தொண்டனின் மன நிலை.கடந்த நான்கரை ஆண்டுகளில் முதல்வர் பதவியில் துணிவோடும் தனித்தன்மையோடும் செயல்பட்டவர் ஈ.பி.எஸ் எனவே ஒற்றை தலைமைக்கு எடப்பாடி இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என குறிப்பிட்டார்.

அ.தி.மு.க வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க வின் தலையீடு குறித்த கேள்விக்கு அது குறித்து கட்சி தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என பதலளித்தார்.அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி கருத்து குறித்த கேள்விக்கு புகழேந்தி ஒரு பப்பு என பதலளித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், பொன்மலை பகுதி செயலாளர் பாலு, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி மற்றும் வட்ட செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO