திருச்சி எம்ஜிஆர் தலையில் காங்கிரஸ் துண்டு - பரிகாரம் செய்த அமைச்சர்!!

திருச்சி எம்ஜிஆர் தலையில் காங்கிரஸ் துண்டு - பரிகாரம் செய்த அமைச்சர்!!

திருச்சி நீதிமன்றம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 11 மணி அளவில் நின்ற நிலையில் உள்ள எம்ஜிஆர் சிலையின் தலையில், காங்கிரஸ் கட்சி கரை போட்ட துண்டு போடப்பட்டிருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, அதிமுகவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜனின் மகன் ஜவகர் மற்றும் அ.தி.மு.க.,வினர் அங்கு விரைந்து வந்து, எம்ஜிஆர் சிலையின் தலையில் போடப்பட்டிருந்த காங்கிரஸ் துண்டை அகற்றினர்.

Advertisement

இந்த சம்பவத்தால், திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பின், அ.தி.மு.க.,வினருடன் அங்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன், எம்.ஜி.ஆர்., சிலையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த மாலைகளை அகற்றி சுத்தம் செய்தார். தொடர்ந்து, சிலைக்கு பால் ஊற்றி அபிஷகம் செய்த அவர், புதிய மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.

அதன் பின், அமைச்சர் நடராஜன் பேட்டியளித்த போது

எதிர்பாரதவிதமாக யாரோ சிலர் எம்.ஜி.ஆர். சிலையில் துண்டை போர்த்தியுள்ளனர். இந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் யார் என்பது பதிவாகி உள்ளது. அதை போலீசாரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.காலை 11 மணிக்கு, நடந்துள்ள சம்பவத்தில். சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ள நபர் மூட்டை போல் பை வைத்திருந்தார். எந்தவிதமான அடையாளமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதால் அ.தி.மு.க., சார்பில் போலீசிடம் ப புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Advertisement

அ.தி.மு.க., அமைச்சர் என்ற வகையில், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளேன். எம்.ஜி.ஆரை., அவமதித்த செயலா என்பது பற்றி, போலீசார் கண்டுபிடித்து தெரிவித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS