திருச்சியிலிருந்த 6 மணி நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணியை பரபரப்பாக்கிய அண்ணாமலை

திருச்சியிலிருந்த 6 மணி நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணியை பரபரப்பாக்கிய அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிலிருந்தே  திமுக ,அதிமுக அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுக, அதிமுக அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் இடங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்ந்து பரபரப்புடன் காணப்படுகிறது.திமுக, காங்கிரஸ் இடையே நேற்று(29.01.2022) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெளியேறினர்.

இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை திருச்சி வந்தார் .மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவிடம் 30% இடங்களை கேட்டு நிர்பந்தமா என்ற கேள்விக்கு கூட்டணிக்குள் நடக்கும் பேச்சு வார்த்தைகளை வெளியில் சொல்ல முடியாது. அது இரு கட்சி கூட்டணி களுக்கும் சரியாக இருக்காது என்றார் .பேசி விட்டு சென்ற சில மணித்துளிகளில் மீண்டும் பரபரப்பு துவங்கியது.

அதிமுக பாஜக கூட்டணி உடைகிறது என அதிமுக கட்சியிலும்  பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பேசத் தொடங்கிவிட்டனர். மீண்டும் செய்தியாளர்கள் தனியார் விடுதிக்கு திரும்பினர்.பாரதிய ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்த அறிவிப்பை சந்திக்க தலைவர் தயாராகி விட்டார் என நிர்வாகிகள் தெரிவித்தனர் .மீண்டும் செய்தியாளர் சந்திப்புக்கு கூட்ட அறை ரெடியானது .ஒரு ஐந்து நிமிடத்தில் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குகிறது .தற்போது பேட்டியில்லை என  மீண்டும் நிர்வாகிகளிடமிருந்து தகவல் வந்தது .

6 மணி நேரம் திருச்சியில் தங்கியிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகுந்த பரபரப்புடன் இருந்தார். 8.45 மணியளவில்  கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பங்கீடு தொடர்பாக தொடர்வதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் இருந்த 6 மணி நேரம் திருச்சியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே பரப்பரப்பாகியது.அதிமுக பாஜக கூட்டணி உடையும் நிலை என்ற தகவல் ராக்கெட் வேகத்தில் பரவியது. ஆனால் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதால் பரபரப்பு சிறிது நேரம் அடங்கியுள்ளது.அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. விடிந்தால் தான் அதிமுக பாஜக கூட்டணி உறுதி ஆகுமா இல்லையா என்பது தெரியும் என தொடர்ந்து நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn