உடலை வில்லாய் வளைத்து வித்தை காட்டும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது சுலபமானதே!

உடலை வில்லாய் வளைத்து வித்தை காட்டும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது சுலபமானதே!

உலகில் தோன்றிய பழமையான விளையாட்டுகளில் ஒன்று என ஜிம்னாஸ்டிக்ஸைச் சொல்லலாம். கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காக கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டை கண்டுபிடித்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் நாம் காணும் நவீன ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியை வடிவமைத்தவர்கள் என்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜோஹன் கிறிஸ்டஃப்பிரட்ரிக் மற்றும் பிரட்ரிக் லட்விக் ஜான் ஆகியோரைக் கூறலாம். 

ஜிம்னாஸ்டிக்கை மதர் ஆஃப் ஸ்போர்ட்ஸ் என்பர் எந்தவித விளையாட்டு துறையை தேர்வு செய்தாலும் இந்த ஜிம்னாஸ்டிக் கலையானது எல்லாவற்றிற்கும் முதன்மையானது இதனை கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அவர்கள் தேர்வு செய்யும் துறையில் சிறந்து விளங்க அவர்களுக்கு உடல் வலிமையை மன உறுதியையும் அளிக்கிறது.

திருச்சியிலே ஜிம்னாஸ்டிக் கலையை கற்றுக் கொடுப்பதற்குசிறந்த பயிற்சி கூடத்தோடு ஜிம்னாஸ்டிக் கலையில் ஆராய்ச்சி செய்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு திருச்சி தேசிய கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் டாக்டர் பூபதி கூறுகையில்,

ஒரு குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவர்களை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்பதுதான் பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கும். எல்லா வசதிகளும் கொண்ட பிளே ஸ்கூலில் சேர்த்துவிட்ட பிறகு அடுத்தகட்டமாக அவர்களுக்கு என்னென்ன பயிற்சி அளிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, பாட்டு, நடனம், கீபோர்ட், கால்பந்து, கிரிக்கெட்ஸ இப்படி பலவிதமான பயிற்சிகளில் அவர்களை சேர்த்துவிடுவார்கள். இவை எல்லாம் போட்டி நிறைந்தது. மேலும் குழந்தைகள் கொஞ்சம் சீரியசாக எடுக்க வேண்டிய பயிற்சிகள்.

அப்பதான் அவர்கள் அடுத்தகட்டத்திற்கு போக முடியும். ஆனால் குழந்தைகள் குழந்தைகளாக வளர வேண்டும். இது போன்ற பயிற்சிகளை அவர்கள் விவரம் புரியும் வயதில் எடுத்துக் கொண்டால் போதும். குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் ஏற்ற பயிற்சி அளித்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்காகவே திருச்சி தேசிய கல்லூரி ஜிம்னாஸ்டிக் அகாடமியில் பயிற்சி அளித்து வருகிறோம் 

முழுக்க முழுக்க குழந்தைகளின் மனநிலை மற்றும் அவர்களுக்கு பிடித்த முறையில் இங்கு பயிற்சி அளிக்கப்படும். நான்கு வயதிற்கு மேல் 12 வயது வரை இந்த பயிற்சியை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அதற்கு மேல் அவர்கள் தேர்வு செய்யும் எந்த விளையாட்டு துறையிலும் அவர்கள் சிறந்து விளங்க முடியும் அதற்கேற்ற உடல் திறனை இந்த ஜிம்னாஸ்டிக்கலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது.

இந்த கோடை காலத்தில் குழந்தைகளின் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திருச்சி நேஷனல் கல்லூரியில் மே 6 முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision