புதிய காவிரி பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டம்

புதிய காவிரி பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டம்

திருச்சி மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றானது காவிரி பாலம். 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காவேரி பாலம் 540 மீட்டர் நீளம் கொண்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம்  இணைப்பாக இப்பாலம் செயல்பட்டது. 46 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பாலமானதுமானது சேதமடைந்துள்ளதால் இதற்கு மாற்று பாலம் அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை முன்மொழிந்துள்ளது.

புதிய பாலம் அமைக்கப்படும் என்ற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் ஏற்கனவே பாலம் சேதமடைந்ததை ஒட்டிப் சீரமைக்கும் பணியில் பல கோடிகள் செலவழித்து உள்ளனர். எனவே புதிய பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

புதிய பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு 80 கோடி  செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் பாலம் அமைப்பதற்கான திட்ட வரையறைகளை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்து பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே புதிய பாலம் அமைப்பதற்கு முன்னதாக மாநில நெடுஞ்சாலை துறை ரூபாய் ஏழு கோடி செலவில் பாலத்தினை சீரமைக்க திட்டமிட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU