திருச்சி சுங்கச்சாவடிகளில் நாளை (01.09.2023) முதல் கட்டணம் உயர்வு விபரம்

திருச்சி சுங்கச்சாவடிகளில் நாளை (01.09.2023) முதல் கட்டணம் உயர்வு விபரம்

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சுங்கச்சாவடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தினமும் பேருந்து, லாரி, வேன், கார் உள்ளிட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.

இங்கு நாளை (01.09.2023) முதல் வாகனங்களுக்கான கட்டணம் உயர்கிறது. கட்டணம் உயர்வு கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்ட ணம் ரூ.55 என்றும், ஒரே நாளில் பலமுறை பயன்பாட் டிற்கான கட்டணம் ரூ.80 ஆக வும், பலமுறை பயன்பாட்டிற் கான மாத கட்டணம் ரூ.1,630 எனவும், இலகு ரக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.95, ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு ரூ.145, மாத கட்டணம் ரூ.2,850 என்றும், ட்ரக் மற்றும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.190, ஒரே நாளில் பலமுறை பயன்பாட் டிற்கு ரூ.285, மாத கட்டண மாக ரூ.5,700 என்றும் பல அச்சுகள் கொண்ட வாகனம் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.305, ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு ரூ.460, பல முறை பயன்பாட்டிற்கான மாத கட்டணமாக ரூ.9,160 என்றும் உயர்ந்துள்ளது.

தஞ்சை தேசிய நெடுஞ்சா லையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் (01.09.2023) தேதி முதல் உயர்கிறது. ரூ.5 முதல் ரூ.60 வரை வாக னங்களின் வகைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களில் விலை உயரும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டும் நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இதே போல் மேம்பாலங்களில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. இது மட்டுமல்லாமல் மேம்பாலங்களில் மழை நீர் வெளியேறக் கூடிய குழாய்கள் சேதமடைந்து இருப்பதால் மழை நீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் பிரதான சாலைகளில் மின் விளக்குகள் எரியாமல் இருட்டாகவே உள்ளது. உடனடியாக சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணத்தை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை சாலைகள் பராமரிப்பதில் காட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision