அடிப்படை வசதி இன்றி வட்டாட்சியர் அலுவலகம்

அடிப்படை வசதி இன்றி வட்டாட்சியர் அலுவலகம்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தேவையான பட்டா பெயர் மாற்றம் வருவாய் சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் ஜாதி சான்றிதழ் போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

தற்போது கோடை வெயில் வெப்பம் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாவதாகவும், வட்டாச்சியர் அலுவலகத்திற்க்கு வரும் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு ஒரு குடிநீர் வசதி கூட இல்லை என்றும், பெயரளவுக்கு இரண்டு சின்டெக்ஸ் டேங்குகளை வைத்திருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

மேலும் நெடுந்தொலைவில் இருந்து வருபவர்களுக்கு உடல் உபாதைகளை கழிக்க போதிய கழிப்பிட வசதி இல்லை என்றும், இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், தாங்கள் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை பயன்படுத்த செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாற்றுதிறனாளிகள் யாரேனும் வட்டாட்சியரை பார்க்க வந்தால் அவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர். 

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பிற அரசு துறைகளான வட்ட வழங்கல் அலுவலகம், ஆதி திராவிட நலத்துறை, மற்றும் பத்திரப்பதிவுத்துறை, வனத்துறை போன்ற அரசு அலுவலகங்கள் இருப்பதினால் இங்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்கு போதிய கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn