மாநகராட்சி அலுவலகம் முன்பு பிஜேபி கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி அலுவலகம் முன்பு பிஜேபி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள், குடிநீர் திட்டங்கள் குடிநீருக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இது சாலைகளை சீர்படுத்த வலியுறுத்தி மாநகர மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு  நிர்வாகிகள் பார்த்திபன், ஜெயகரன் காளீஸ்வரர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

தொடந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த
மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகரன்... தற்போது திருச்சி மாநகர் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதற்கு பணி செய்ய ஒப்பந்தக்காரர்கள் முன்வருவதில்லை காரணம் திருச்சி மாநகராட்சி ஆணையர் 40% கமிஷன் கேட்பதால் பணி செய்ய முன்வரவில்லை.

எனவே, உடனடியாக மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுத்து திருச்சி மாநகராட்சி சாலைகளை சீர் படுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO