ஸ்கிப் பண்ணிடாதீங்க! நிகர இழப்பிலிருந்து நிகர லாபத்தை பதிவு செய்திருக்கு இந்நிறுவனம் !

ஸ்கிப் பண்ணிடாதீங்க!  நிகர இழப்பிலிருந்து நிகர லாபத்தை பதிவு செய்திருக்கு இந்நிறுவனம் !

திங்கள்கிழமை வர்த்தகத்தில் அதாங்க நேற்று 20 சதவிகிதம் உச்சத்தை தொட்டு, தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனம் 52 வார உச்சத்தில் வர்த்தகமாகி வருது சமீபத்திய காலாண்டில் நிறுவனம் சூப்பரான முடிவுகளை அளிச்சு இருக்கு அதனால இன்ட்ராடே அதிகபட்சமாக ரூபாய் 203.10 ஐ தொட்டுடுச்சு.

Skipper India ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் (Q1FY24) ரூபாய் 23.0 கோடி நிகர லாபத்தைப் பதிவுசெய்துள்ளதாக தெரிவிச்சு இருக்கு, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (Q1FY23) ரூபாய் 5.3 கோடி நஷ்டமாக இருந்துச்சு. அதேபோல வருவாய் 33.3 சதவிகிதம் அதிகரிச்சு 24ஆம் காலாண்டில் ரூபாய் 554.6 கோடியாக உயர்ந்திருக்கு, இது Q1FY23ல் ரூபாய் 416.1 கோடியாக இருந்தது. அதன் EBITDA சமீபத்திய காலாண்டில் ரூபாய் 60.14 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் வெறும் 35.83 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது இப்படி பக்காவா ரிசல்டை கொடுத்ததால பட்டைய கிளப்பி 20 சதவிகிதம் அப்பர் சர்க்யூட்டை தொட்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோக கட்டமைப்புகள், குழாய்களைப் பொருத்துதல் உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் ஸ்கிப்பர் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் உள்கட்டமைப்புப் பிரிவில் EPC திட்டங்களையும் திறம்பட மேற்கொள்கிறது. இன்ஜினியரிங் பொருட்கள் விநியோகம் மற்றும் பல SEB களின் EPC வேலைகள் மற்றும் பல்வேறு ஏற்றுமதி விநியோகங்களுக்காக நிறுவனத்தின் ஆர்டர் வரத்து ரூபாய் 1,215.00 கோடியாக இருந்தது. மேலும், ரூபாய் 6,000 கோடிகள் (சர்வதேசம்) மற்றும் ரூபாய் 6,550 கோடிகள் (உள்நாட்டு) வலுவான ஆர்டர்களை கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 109.60 சதவிகிதமும், கடந்த ஒரு ஆண்டில் 234.32 சதவிகிதமும் மல்டிபேக்கர் வருமானத்தை வாரி வழங்கியிருக்கிறது. ஒரு முதலீட்டாளர் ஒரு லட்ச ரூபாயை ஓராண்டுக்கு முன் முதலீடு செய்திருந்தால், அந்த மதிப்பு இன்று ரூபாய் 3.34 லட்சமாக இருக்கும் !

ரூபாய் 1,738 கோடி சந்தை மூலதனத்துடன், ஸ்கிப்பர் ஒரு சிறிய நிறுவனமாக திகழ்கிறது. இது 4.74 சதவிகிதம் ஈக்விட்டியில் குறைந்த வருமானம் மற்றும் 0.64ன் சிறந்த கடன்-பங்கு விகிதம். அதன் பங்குகள் 48.92ன் விலைக்கு வருமான விகிதத்தில் (P/E) வர்த்தகம் செய்யப்படுகிறது, தொழில்துறை P/E 9.00 ஐ விட அதிகமாகும், இப்பங்கு அதன் சக போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக மதிப்பிடப்படலாம் என்பதைக் குறிக்கிறது.

இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் இதில் 71.89 சதவிகித பங்குகளையும், சில்லறை முதலீட்டாளர்கள் 18.18 சதவிகிதத்தையும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 9.93 சதவிகித பங்குகளையும் வைத்துள்ளனர் என்பதால் இப்பங்கில் கவனம் செலுத்த சொல்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision