தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு இலவச வேலை வாய்ப்பு முகாம் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் 25 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. முகாமில் பங்கேற்ற படித்த இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தினர் .வேலை வாய்ப்பு முகாமில் ஆண் ,பெண் என மொத்தம் 528 பேர் கலந்து கொண்டனர்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 528 பேரில் 211 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை அந்தந்த நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு முகாமினை மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் தலைமையேற்று துவங்கி வைத்தார். உடன் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, மகளிர் திட்ட உதவி அலுவலர் இளங்கோவன், ஜான் பால் அந்தோணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகஸ்டின் இமானுவேல், தேவசேனன், தீனதயாளன்,வட்டார இயக்க மேலாளர் சிவக்குமார் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn