காவேரி மருத்துவமனை சார்பில் இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

காவேரி மருத்துவமனை சார்பில்  இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி காவேரி மருத்துவமனை skill bay academy (enabling life skills) சார்பில் வேலைக்கு தேவையான திறன் பயிற்சி வகுப்புகள்(career and competency development program) CCDP வேலை தேடும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரக பகுதிகளிலிருந்து வரும் பட்டதாரி மாணவர்கள் தங்களுடைய வாழ்வில் முன்னேறுவதற்காக வேலைவாய்ப்புகளை எளிதில் பெற தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும் .

21 முதல் 26 வயது உடைய இளங்கலை / முதுகலை பட்டம் படித்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். பயிற்சி காலம் 50 நாட்கள் ஆகும். பயிற்சி வகுப்பில் திறன் பயிற்சிகள், ஆங்கில புலமை, கணினி பயிற்சிகள், எம் எஸ் ஆபீஸ் பயன்பாடுகள், மருத்துவமனை நிர்வாகம், நேர்காணல் திறன் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு இலவச சீருடை உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 50 நாட்கள் பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு காவேரி மருத்துவமனையிலேயே வேலைவாய்ப்பு அல்லது பல நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

வகுப்பிற்கு 30 மாணவர்கள் என பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜூலை 20ந் தேதி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் . விருப்பமுள்ள இளைஞர்கள் வாய்ப்பை பயன்படுத்தி க்கொள்ளலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn