ஐக்கிய அரபு நாட்டின் ஆர்டரை அள்ளிக்குவித்தது
இந்தியாவின் முன்னணி தொழிற் குழுமங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் கட்டுமானம், உள்கட்டமைப்பு மேம்பாடு, இன்ஜினியரிங் ஆகியவற்றில் உலகளவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. சமீபத் திய ஆண்டுகளாக இந்த நிறுவனம் மின் உற்பத்தித் திட்டங்களில் வெற்றி கண்டு, கணிசமான ஆர்டர்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்சில் மின்உற்பத்தி, வினியோகம் திட்டங்களுக்கான ஆர்டர்களை எல் அண்ட டி நிறுவனம் தற்பொழுது பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மத்திய கிழக்கு நாடுகளில் எல் அண்ட் டி நிறுவனம் மின்சாரம், வினியோகம் தொடர்பான வணிகத்தில் 2 ஆயிரத்து 500 கோடி முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், மின்உற்பத்தி, பராமரிப்பு, வினியோகம், கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் துணைமின் நிலையங்களை அமைத்தல் தொடர்பான ஆர்டர்களை எல் அண்ட் டி பெற்றுள்ளது. குவைத்தில் நிலத்தடி மின் கேபிள்களை அமைத்து, மின் வினியோகம் மற்றும் துணை மின் நிலையங்கள் பராமரிப்பு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் எல். அண்டு டி பங்கின் விலை 0.72 சதவிகிதம் குறைந்து ரூபாய் 3518.05க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது. கிட்டத்தட்ட 52 வார உயர்வை ஒட்டி பரிவர்த்தனை நடந்து கொண்டிருக்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision