இலவச அமரர் ஊர்தி சேவை ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 

இலவச அமரர் ஊர்தி சேவை ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 

தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மூலம் செயல்படுத்தி வருகின்ற இலவச அமரர் ஊர்தி சேவை திட்டத்தில் பணிபுரிய ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 13.05.2021 வியாழக்கிழமை அன்று திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இலவச அமரர் ஊர்தி சேவை அலுவலகத்தில் நடைபெற இருக்கின்றது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரிவதற்கான அடிப்படைத் தகுதிகள் :

ஓட்டுநர் பதவிக்கு தினமும் 12 மணிநேரம் பகல் மற்றும் இரவு மற்றும் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும்.

இந்த ஓட்டுனர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

25 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

160 2.5 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். இது தவிர இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது பேட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் 13800 மேலே குறிப்பிடப்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் தொலைபேசி எண் 044-28554548 / 9677067377 வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி தொடர்பு கொள்ளலாம்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம் : மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF