சிகிச்சைக்காக வெளியிலேயே காத்திருக்கும் அவலநிலை பொதுமக்கள் அவதி

சிகிச்சைக்காக வெளியிலேயே காத்திருக்கும் அவலநிலை பொதுமக்கள் அவதி

திருச்சி இபி ரோடு சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளும், கர்பிணி பெண்களும் வெயிலில் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் இன்று காலை இருவர் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் உடனடியாக சிகிச்சை அளித்து அனுப்பாமல் தாமதமாக்குகின்றனர்.

ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அவர்களை காத்திருக்க செய்கின்றனர் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள். இது மட்டுமின்றி சிகிச்சைக்கு வருபவர்களிடம் சரியான முறையில் நடத்தாமல் அநாகரீகமாக பேசுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு நோய்த்தொற்றால் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு மக்கள் அஞ்சி கொண்டிருக்கும் நிலையில் அவசர சிகிச்சைக்காகவும், கர்ப்ப காலத்தில் மாதாந்திர பரிசோதனைக்காக வருபவர்களுக்கும் வெயிலில் அதிக நேரம் இருப்பதால் பல்வேறு விதமான  பிரச்சினைகள் ஏற்படலாம்.

மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினரும் இதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை கருத்தில் கொண்டு இதுபோன்று இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான  உதவிகளையும் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த மருத்துவமனை  வளாகத்தின் வெளியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சுகாதார நிலையம் முன்பு நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அப்பகுதியை பயத்துடனேயே கடந்து செல்வதற்கான சூழல் ஏற்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் வீரமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF