விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், விபத்துக்குள்ளான காரும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நிலைதடுமாறி 10 அடி பள்ளத்தில் கவுழ்ந்த பேருந்திலிருந்த 40-க்கும் மேற்பட்டோர் பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், எஸ்.பி., ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் விசாரணை மேற்கோண்டும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டி மற்றும் ஆளிப்பட்டியை சேர்ந்த நண்பர்கள்நாகரத்தினம்(23),ஜயப்பன்(35), மணிகண்டன், முத்தமிழ்செல்வன்(50 ) மற்றும் பில்லூர் தீனதாயளன்(20) ஆகியோர் கார் ஒன்றில் பழனி மற்றும் அருகேயுள்ள கனக்கம்பட்டியில் வழிபாடு செய்துவிட்டு மீண்டும் நேற்று மாலை ஊர் திரும்பியுள்ளனர். 

கார், மணப்பாறைக்கு முன்னதாக திருச்சி ௭ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்கொத்தனூர் பிரிவு அருகே சென்றபோது, காரின் டயர் வெடித்துள்ளது. இதில் கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுதிசை வரை சென்றுள்ளது. அப்போது, எதிர்திசையில் திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சுமார் 70 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தினை ஓட்டுனர் நிறுத்த முயன்ற நிலையில் பேருந்து காருடன் சேர்ந்து அருகிலிருந்த 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலசம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த ஓட்டுனர் ராஜேந்திரன், நடத்துனர் பிரகாஷ் மற்றும் பேருந்தில் பயணித்த 41 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற் சென்ற வையம்பட்டி போலீஸார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுஜித்குமார், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தீனதயாளன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision