காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு

காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார். தலைமையில்நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது....... 

நமது நாகரிகம் என்பது முதலில் ஆற்றங்கரையில் தான் துவங்கியது. நீரானது ஒரே சீராக ஓடும் என்பது இல்லை. அவை பனிக்கட்டியாக உருகி இயற்கை சீற்றங்களாக உருவாகிறது. மேலும், தொழிற்சாலைகள் மூலம் அதிகப்படியாக உமிழப்படும் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடும் போது அவற்றை சரி செய்வதற்கு ஒவ்வொரு தொழிற்சாலைகள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்து கார்பன் சேமிப்பாக கொண்டுவரப்படும் எனவும், மேலும் வெப்ப நிலையானது 2 சதவிதம் அதிகரித்தால் இதன் மூலம் அதிகபடியான வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவும், எனவே, renewable energy மாற்று எரிசக்தி காற்றாலை சோலர் உபயோகிப்பதன் மூலம் வெப்ப நிலையை குறைக்க முடியும். மேலும், ஒவ்வொரு உலக நாடுகளும் ஒவ்வொரு முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பாருவ கால நிலை மாற்றத்தை எதிர்கொள்கிறது. இந்தியாவிற்கான இலக்காக 2070 ஆம் ஆண்டு கார்பன் டை ஆக்ஸ்டை சமநிலைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டும் 2021-22 ம் ஆண்டில் கால நிலை பருவ மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டு 2060க்குள் கார்பன்டை ஆக்ஸைடை சமநிலை படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலக்கை அடைய தொழில் நிறுவனங்கள் பொது இடங்கள் மற்றும் தனியார் பங்களிப்பு உள்ள இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் அதிக அளவில் மரக்கன்றுகள் நடவு செய்வதின் மூலம் கார்பன்டை ஆக்ஸைடை ஈர்க்க முடியும் என்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பொறுத்தவரை 12 சதவீதத்திலிருந்து 13 சதவீதம் பசுமை போர்வை உள்ளது என்றும் தெரிவித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, வேளாண்துறை மற்றும் வனத்துறை மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடும் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பசுமை திட்டத்தின் மூலம் தனிப்பட்ட நபர்கள் மரக்கன்று பெற்று நடவு செய்யலாம். மேலும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாலித்தீன் பைகளை அலட்சியமாக வெளியே வீசுவதின் மூலம் அவை பூமிக்கடியில் பல அடுக்ககடுக்காக படிந்து நிலத்தடி நிர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து, கடலில் வீணாக கலக்கிறது. பொதுமக்களாகிய நாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞ்சபை திட்டத்தினை பின்பற்றினால் சுற்றுச்சூழலை பாதுகாக்க இயலும்.

மேலும் வளமான நிலம், குடிநீர் தூய்மையான காற்று உருவாக்குவது நமது கடமையாகும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தனது உரையில் தெரிவித்ததாவது..... பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 23.70 சதவீதம் உள்ள பசுமை போர்வையினை 33 சதவீதமாக உயர்த்துவதே நோக்கமாகும். மேலும் மரக்கன்றுகள் தேவை குறித்து மற்றும் எவ்வளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட விபரம் குறித்து பசுமை தமிழ்நாடு இயக்க இணையதளத்தில் அனைவரும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இயக்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகள் பசுமை போர்வையை அதிகரித்திடும் வகையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. 2022- 23ம் ஆண்டில் வனத்துறையின் மூலம் 3.10 வட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றும், 2023-24 ஆம் ஆண்டு 20.00 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவற்றில் வனத்துறை மூலம் 13.00 லட்சம பிற துறைகளுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்றும். 2024-25ம் ஆண்டிற்கு 21.16 மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய மாவட்ட பசுமை குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் கிரண், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை துணை இயக்குநர் எல் சௌமியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision