மேயர் அன்பழகன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

மேயர் அன்பழகன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகர பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் பேசியதாவது.... பாலித்தீன் என்கின்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது தான் பிளாஸ்டிக்  இது ஒரு வகையான பெட்ரோலிய வகையைச் சேர்ந்த பொருளாகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நீர் நிலைகளான வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், அதில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் பாதிக்கப்பட்டு அவைகள் மூலம் மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த பிளாஸ்டிக்கை உருவெடுத்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நிலப்பரப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டு அதில் வாழும் உயிரினங்கள் கால்நடைகள் பறவைகள், விலங்குகள் விளை நிலங்கள், பசுமை பரப்புகள், காடுகள் ஆகியவை அழியும் விளிம்பிற்கு சென்றுள்ளது. இந்த ஆபத்தான நெகிழியை மனிதர்களால் பயன்படுத்தப்படும் நேரம் நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் அவை அழிப்பதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும்  வனத்துறை அரசாணை எண்.84ல் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

(1)உணவுப் பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், (2) பிளாஸ்டிக் தட்டுகள், (3) பிளாஸ்டிக் குவளைகள், (4) நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பைகள், (5) பிளாஸ்டிக் தூக்குபைகள். (6) பிளாஸ்டிக்தேநீர் குவளைகள், (7) பிளாஸ்டிக் உறிஞ்சிகுழல்கள், (8) பிளாஸ்டிக் கொடிகள், (9) பிளாஸ்டிக் விரிப்புகள், (10) பிளாஸ்டிக் மூலம் பூசப்பட்ட காகித தட்டுகள், (11) தெர்மாகோல் குவளைகள், (12) பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் மூலம் பூசப்பட்ட காகித பைகள்.

எனவே சுற்றுச் சூழலை பாதிக்கும் நோக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த தடை உத்தரவை பொதுமக்களிடம் பேராதரவுடன் நடைமுறைப்படுத்துகின்ற வகையில் மேலே குறிப்பிட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிற்றுண்டிச்சாலைகள், திருமண மண்டபங்கள், பல்பொருள் அங்காடி மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவிர்க்கும் படி சுற்றுச்சூழல் தீங்கு விளைவிக்காத இதற்கு முன் நாம் அனைவரும் பயன்படுத்தி வந்த எளிதில் மக்கும் தன்மை கூடிய இயற்கையில் கிடைக்கும் மாற்று பொருளான துணிப்பை, சணல் பைகள்,

பாக்கு மட்டைகள் ஆன பொருள்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கண்ணாடி குவளைகள், மரக்கரண்டிகள், வாழை இலை மற்றும் தாமரை இலை போன்ற அவைகளை மீண்டும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும். மேலும்,நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை 100 சதவீதம் தடுக்கும் பொருட்டு மாற்று பொருட்கள் உபயோகபடுத்த வேண்டும் என்றும்,

வரும் 31.05.2022 தேதிக்குள் வியாபாரிகள் நெகிழிப்பொருட்கள் (plastic ) விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மஞ்சபை, பேப்பர் கவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கப்பட்டது. வரும் 01.06.2022 தேதி முதல் நெகிழிப்பொருட்கள் (plastic) பயன்படுத்துவதை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும், எனவும், மாநகராட்சி மேயர் அவர்கள் வணிகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தெரிவித்தார்.  

கூட்டத்தில் துணை மேயர் ஜி, திவ்யா , நகர்நல அலுவலர் மரு.எம்.யாழினி, மண்டலக்குழுத்தலைவர்கள் மு.மதிவாணான், த.துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணன், பி.ஜெயநிர்மலா, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு, வணிகர் சங்க பிரதிநிதிகள் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO