திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மே- 23 முதல் தொடக்கம்

திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மே- 23 முதல் தொடக்கம்

இசையில் எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவிகளும் கற்று பயன் பெறவும் அதனை மேம்படுத்தவும் 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப் பள்ளி 1997 முதல் தொடங்கப்பட்டு தற்போது திருவரங்கம் மேலூர் ரோடு எண்:32 மூலத்தோப்பு என்ற முகவரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இசைப்பள்ளியில் குரலிசை, நாதகரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின்மற்றும் மிருதங்கம் ஆகிய இசைப் பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுமூன்றாண்டு சான்றிதழ் படிப்பாகும்.

இதில் 12 வயது முதல் 25 வரை உள்ள மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர், குரலிசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டிய பயிற்சிக்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம் நாதகரம், தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்பக் கல்வித் தகுதியில் சலுகை உண்டு. இப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாண்டு இசைப்பயிற்சிக்கு பிறகு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும், பயிற்சிக் கட்டணமாக ரூ350/மட்டுமே வசூலிக்கப்படும். மாதந்தோறும் ரூ.400/ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும் வெளியூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் இலவசமாக தங்கிப் பயிலவும், பேருந்துகளில் இலவச பயணச் சலுகை அரசால் வழங்கப்படுகிறது.

இசைப்பள்ளிக்கான மாணவ சேர்க்கை 23:05:2022 முதல் நடைபெறும். இதில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்0431-2962942 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்டதகவலை திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவர்சு.சிவராசு  தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp


#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO