வீட்டு காய்கறி தோட்டம் குறித்த ஒரு நாள் கட்டணமில்லா பயிற்சி முன்பதிவு செய்யலாம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், புதிய தொழில் நுட்பங்கள், செயல்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நமது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் பலதரப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்ட காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து வருடம் முழுவதும் காய்கறிகளை நகர மற்றும் கிராம பொதுமக்கள் பெறும் விதமாக ஒரு நாள் கட்டணமில்லா நிலைய பயிற்சி (28.12.2023) (வியாழக்கிழமை கிழமை) அன்று காலை 10:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்ய இணைப் பேராசிரியர் முனைவர் சி.ராஜா பாபு, 04312962854 அல்லது 9171717832 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் (காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை) தொடர்பு கொள்ளவும். முன்பதிவு செய்ய கடைசி நாள் (27.12.2023).
குறிப்பு : ( பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் குறிப்பேடு வழங்கப்படும் ). காலை ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணி வரை வருகை பதிவும், பயிற்சி காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரையும் நடைபெறும் என்று சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision