ஊடகத்துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நாளை (29.09.2023) ஒரு நாள் கருத்தரங்கு
இந்திய நாட்டின் நான்காம் தூணாக ஊடகத்துறை உள்ளது. இத்துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு வழிகள்,வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் நேர்மையாகவும், சமூக அக்கறையுடன் சிறப்பாக செயல்பட ஊடகத்துறை சார்ந்து பயின்று சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு பிரபல செய்தி ஆசிரியர் தலைமையில் சமூக அக்கறை என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்க நடைபெற உள்ளது.
நாளை (29.09.2023) திருச்சி மாவட்டம் மணிகண்டம் தொன் போஸ்கோ மீடியா அகாடமியில் மூத்த செய்தி ஆசிரியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பயன்பெற உள்ள மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதில் தற்போது உள்ள ஊடக துறையின் நிலவரம், சமூகத்தில் தங்களின் பார்வை, செய்தியாளருடைய கண்ணோட்டம் குறித்து அனைத்து தரப்பு விளக்கங்களையும் அளிக்க உள்ளார். மேலும் ஊடகத்துறை மூலம் சமுதாயத்திற்கு நல்லதொரு மாற்றம் நடக்க விரும்பும் மாணவ - மாணவிகளுடைய சந்தேகங்களுக்கு மூத்த செய்தி ஆசிரியர் பதிலளிக்க உள்ளார்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் வரவேற்கப்படுகின்றனர். தொடர்புக்கு 96 26 66 4605 / 98 43 64 6602
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision