திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை  பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கூடுதல் விலையில் பால் வாங்குவதால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு பால் வரத்து குறைகிறது. அதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தற்போது நலிவடைந்து வருகின்றன. கூட்டுறவு சங்கங்களை காப்பாற்ற தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும்,

பால் உற்பத்தியாளரிடம் பெறப்படும் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.10 மானியம் வழங்கிடவும், கால்நடை தீவனங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானியத்தில் வழங்கிடவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பெறப்படும் பாலினை எடை போட்டு வாங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்  தங்கராசு தலைமை வகித்தார் .ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், பெருமாள், ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், பிரேமாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர்  இந்திரஜித், மாவட்ட செயலாளர்  சிவசூரியன் ,மாவட்ட பொருளாளர்  பழனிச்சாமி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி ,உசேன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்

அமைப்புசாரா தொழிற்சங்கத்தின்  தாலுகா பொதுச் செயலாளர் நல்லுச்சாமி, பாடகர் ராமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சௌக்கத் அலி ,கணேசன், ஆறுமுகம், பழனிச்சாமி உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய  நகர குழுகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்ட முழக்க மிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn