நாய் குறுக்கே வந்ததால் வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வஜ்ரசேர்வராயன் கோட்டை அடுத்த ஜெக்கம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தம்பிதுரை. இவரது மனைவி வசந்தராணி (32). இவர் 2013-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் பணிக்கு சேர்ந்து தற்போது மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில் உள்ள வீ.பெரியபட்டி பிர்கா வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை என்.பூலாம்பட்டியில் பணி முடித்த வசந்தராணி மணப்பாறை வருவதற்காக, ஒடிஎச் ஆபரேட்டர் லாசர் என்பவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். இருசக்கர வாகனம் சுண்டக்காம்பட்டி அருகே வந்தபோது தெருநாய்கள் இவர்களது வாகனத்தின் குறுக்கே வந்துள்ளது. உடனே லாசர் பிரேக் பிடித்ததால், பின்னால் அமர்ந்திருந்த வசந்தராணி நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில் வசந்தராணி தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனே அப்பகுதி மக்கள் வசந்தராணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சணாமூர்த்தி, வட்டாட்சியர் தனலெட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர் விசாரித்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் ஆய்வாளர் உடல் சொந்த ஊருக்கு செண்டு செல்லப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision