திருச்சி மாநகராட்சி பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பு

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பு

திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது

 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ரோபோட்டிக் வகுப்பை தனியார் நிறுவனம் சார்பில் நடத்துகிறார்கள். வாரந்தோறும் 2 வகுப்புகள் வீதம் ஓராண்டுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது. 


இதில் ரோபோட் தயாரிக்கும் முறை, அறிவியல் குறித்த அடிப்படை விஷயங்கள் உள்ளிட்டவை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. தொடக்க விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி, அரசு மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் செந்தில்குமார், வட்டாரக் கல்வி அலுவலர் அர்ஜூன், ரோபோடிக்ஸ் பயிற்சியாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சிராஜுதீன் வரவேற்றார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் மேரி. தனசெல்வி நன்றி கூறினார். இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி கூறுகையில்.....'மாநகராட்சி பள்ளியில் முதன்முறையாக ரோபோட்டிக் வகுப்பு நடத்தப்படுகிறது.

வரும் நாட்களில் இதுபோன்ற வகுப்புகளை மற்ற பள்ளிகளிலும் நடத்துவ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.