திருச்சியில் சேவல் போட்டி மற்றும் கண்காட்சி - தங்கப் பரிசு அறிவிப்பு

திருச்சியில் சேவல் போட்டி மற்றும் கண்காட்சி - தங்கப் பரிசு அறிவிப்பு

திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறி வால் சேவல் நல சங்கம், ஒரிஜினல் ராக்போர்ட் அசில் பிரிட்ர்ஸ் நடத்தும் மூன்றாம் ஆண்டு அழகு சேவல் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

நாளை (18.06.2023) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திருச்சி வயலூர் அதவத்தூர் ரோடு ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த சேவல் போட்டி மற்றும் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் முதல் நான்கு தரத்தில் தேர்வாகும் சேவல்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனுமதி இலவசம்.

மேலும் போட்டி மற்றும் கண்காட்சியில் இடம்பெறக்கூடிய சேவல்களுக்கு நுழைவு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் விதிமுறைகள் குறித்து கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn