திருச்சி மாவட்ட காங்கிரஸ் அறிக்கை

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அறிக்கை

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்.... தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பாசிச பாஜக அரசை கண்டித்து, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜ் முன்னிலையில் நாளை (28.02.2024) காலை 09:50 மணியளவில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து சசக்திகரன் அபியான் (RGPSA), சிறுபான்மை பிரிவு, பட்டதாரி அணி, எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, OBC பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ,மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, கலைப்பிரிவு ,

மீனவர் அணி, இலக்கிய அணி, INTUC அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் பிரிவு ,மனித உரிமை பிரிவு , துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்குபெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision