திருச்சியில் 100 பயனாளிகளுக்கு சமத்துவபுரம் வீடுகள்
மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் எனும் தந்தை பெரியாரின் செய்தியை பரப்பும் நோக்கத்துடன், சமூக நீதியை ஏற்படுத்தவும், சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் சமத்துவபுரங்கள் துவங்கப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், காட்டுக்குளம் ஊராட்சி, பெரிய காட்டுக்குளம் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டத்தின்கீழ் 9.47 ஏக்கர் பரப்பளவில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், நியாய விலைக்கடை, மைதானம், பூங்கா, சாலைகள் மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இச்சமத்துவபுரத்திற்கு 112.81 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சமத்துவபுரத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (28.06.2023) (புதன் கிழமை) காலை 10:45 மணிக்கு காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளின் விவரம் : ஆதி திராவிடர்கள் 40, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25, பிற்படுத்தப்பட்டவர்கள் 25, மற்றவர்கள் 10, மொத்தம் - 100
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn