ஶ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி 4ம் சுற்றில் முன்னிலை

ஶ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி 4ம் சுற்றில் முன்னிலை

திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 150363 ஆண்கள், 161093 பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 311484 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 116450 ஆண்கள், 120742 பெண்கள், 15 மூன்றாம் பாலினம் என மொத்தம் 237207 வாக்களித்து உள்ளனர். மொத்த 76.15 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில்

அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் 12575 வாக்குகளும்,

திமுக வேட்பாளர் பழனியாண்டி 14697 வாக்குகளும்,

அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 474 வாக்குகளும்,

ஐஜேகே வேட்பாளர் பிரான்சிஸ் மேரி 61 வாக்குகளும்,

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வரதி 2524 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

4ம் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் பெற்ற வாக்குகளை விட 2122  வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் பழனியாண்டி முன்னிலையில் உள்ளார்