திருச்சி மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை 
நியமனம் செய்யப்படவுள்ளது. 


காலிப்பணியிடம் விவரம் :  
1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் - 02 காலிப்பணியிடங்கள் 
2. பட்டதாரி ஆசிரியர் நிலையில் -12 காலிப்பணியிடங்கள்
3. இடைநிலை ஆசிரியர் நிலையில் - 23 காலிப்பணியிடங்கள். 

மாதாந்திர தொகுப்பூதியம்: 
1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் -18,000/- 
 2. பட்டதாரி ஆசிரியர் நிலையில் - 15,000/-
 3. இடைநிலை ஆசிரியர் நிலையில் -12,000/-

கல்வித் தகுதி மற்றும் முன்னுரிமை : 
1. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்)
2. வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET)
3. இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். 
4. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை : 
1. விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


(முகவரி : மாவட்ட ஆதிதிராவிடர் மற ;றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி.)
2. காலிபணியிட விவரங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், திருச்சி. தனி வட்டாட்சியர் (ஆதிந) அலுவலகம் மற்றும் துறையூர் தனிவட்டாட்சியர் (ஆதிந) அலுவலக அறிவிப்பு பலகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.


கால வரம்பு : விண்ணப்பதாரர்கள் (20.09.2023) மாலை 05:00 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியது. மேற்படி கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision