திருச்சியில் மாநில வேளாண்மை கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது

திருச்சியில் மாநில வேளாண்மை கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது

திருச்சியில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மாநில வேளாண்மை கண்காட்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், தென்னங்கன்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து வேளாண் எந்திரங்களையும் காட்சிப்படுத்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்திடவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை ஆணையர் சுப்பிரமணியன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision