இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான லோகோ வடிவமைப்பு போட்டி - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான லோகோ வடிவமைப்பு போட்டி - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த நிலை "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. நவம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கியிருக்கும் நிலையில் இத்திட்டத்திற்கான லோகோ வடிவமைப்பு போட்டியை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில் வெல்பவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் அக்டோபர் 24-ம் தேதிக்குள் தங்களுடைய வடிவமைப்பை கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் பதிவிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பிற்கான பரிசு வழங்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn