திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை வாய்ப்புகள்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊர்க்காவல்படையில் தற்சமயம் 20( ஆண் மற்றும் 18 பெண்2 ஊர்காவல்படையினர் (மொத்தம் 20) தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது.கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி)
வயது : 20 முதல் 45 வயதுக்குள். மேற்கண்ட தகுதியுடையோர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. தகுதியுடையவர்கள் (26.12.23)-ந் தேதி காலை 06:30 மணி முதல் 08.30 மணிக்குள் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்திற்கு கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மூன்றுடன் நேரில் வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision