திருச்சி காவல் உதவி ஆய்வாளர் லத்தியை வீசி தாக்கியதால் இளைஞர் மண்டை உடைப்பு.
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த அமலன் ககிளிண்டன் (24). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் நால் ரோடு அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.
இதனால் பயத்தில் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து சென்றனர். ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் ராஜசேகர், என்னடா விசாரித்து கொண்டிருக்குப்போதே திமிராக செல்கிறாய் என கூறி கையில் வைத்திருந்த லத்தியை அமலன் கிளிண்டன் மீது வீசியுள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த அமலன் கிளிண்டனை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கிச்சை அளித்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட சமயபுரம் காவல் நிலையத்திற்கு மருத்துவமனையில் இருந்து குற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த உதவி ஆய்வாளர் ராஜசேகர் தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சமடைந்தார். இதனைத்தொடர்ந்து சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுரன்குமார் விடுமுறையில் இருந்த நிலையில், அவருடைய அரசு வாகனத்தில் புறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலன் கிளிணடனை நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை பெருசாக்கினால் உன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மேலும் பயந்துபோன அமலன் கிளிண்டன் புகார் ஏதும் அளிக்காமல் உடனடியாக மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தவிட்டார். இந்த சம்பவம் போலீசார் வட்டாரம் மட்டுமின்றி சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மீது காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision