100 நிமிடங்களில் 113 சிறுதானிய உணவு வகைகள் -ஒரு உலக சாதனை முயற்சி

 

சிறுதானிய மாரத்தான் எனும் புதிய உலக சாதனை முயற்சியில் 100 நிமிடங்களில் 113 சிறுதானிய உணவுவகைகளை படைத்து அசத்தியுள்ளார் திருச்சியை சேர்ந்த செஃப் பழனி முருகன் !!

 

பொதுமக்கள் முன்பு நேரடியாக 30.07.2023 அன்று மாலை 6 மணிக்கு சென்னை VRல் நடந்த இந்த உலக சாதனை முயற்சி நேரலையாக சித்திரம் சேனல் மற்றும் ப்ளாக்‌ஷீப் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டுள்ளது.

 இந்த முயற்சியின் நோக்கம் ௭ மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளை 2k கிட்ஸ் என்றழைக்கப்படும் இன்றைய இளைய தலைமுறை வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகை செய்வதே ஆகும்.

 

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக தனித்துவம் கூடிய பல புதிய உணவு வகைகளை ஆராய்ந்து உருவாக்கியுள்ளோம். சமைக்கும் சிறுதானியங்கள் மட்டுமல்லாமல் மசாலா மற்றும் இனிப்பு வகைகளிலும் பாரம்பரியத்தின் சுவையை சேர்ப்பதில் நாங்கள் முனைப்புடன் செயல்பட்டு இந்த உணவுகளை செயல்முறைப்படித்தியுள்ளோம்...

 

இந்த முயற்சியில், உள்ளூர் முதல் உலகளாவிய உணவுகளான, தென்னிந்திய, வட இந்திய மற்றும் பன்னாட்டு உணவு வகைகளில் சூடான & குளிர்ந்த உணவுகள், சூப் வகைகள், ஸ்டாடர் எனப்படும் துவக்க உணவுகள், முக்கிய சாப்பாட்டு வகைகள், அக்கம்பனிமெண்ட் எனப்படும் உணவினோடு செல்லும் வகைகள் மற்றும் டெஸர்ட் எனப்படும் இனிப்பு வகைகள் ஆகிய அனைத்தும் உள்ளன, குறிப்பாக இந்த முயற்சியில் சைவ உணவுகளை மட்டுமே செய்துள்ளோம்

 

இந்த தயாரிப்புகளில் அனைத்து மூலப்பொருட்களையும் அதன் இயற்கையான குணாதிசியங்கள் மாறாமல், சுத்திகரிக்காத பொருட்களாக சேர்க்கப்படுகின்றன.

பனை வெல்லம், நுங்கு வெல்லம், நாட்டுச் சக்கரை, போன்ற இயற்கையான சத்தான பொருட்கள் சேர்க்கபடுகின்றன.

 

சிறுதானியம் என்றதும் ஒரு தண்டனை என்ற உணர்வு இல்லாமல் எப்போது சாப்பிடலாம் என ஆர்வம் தூண்டும் வகையைல் பாரம்பரிய உள்ளூர் உணவில் துவங்கி 2k கிட்ஸ்களுக்கு பிடித்த உலக உணவுகளாக சிறுதானிய மலாய் குல்ஃபி, சிறுதானிய பிரைட் ரைஸ், சிறுதானிய நூடுல்ஸ், சிறுதானிய பாஸ்தா, சிறுதானிய் பானங்கள், பிரியானி, புலாவ் என பல்வேறு வகையான உணவுகள் இந்த நிகழ்வில் இருந்துள்ளது.

 

இந்த பிரம்மாண்டமான உலக சாதனை முயற்சி 30.07.2023 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் செஃப். பழனி முருகன் மற்றும் குழுவினரால் ஒரு கூட்டு முயற்சியில் நிகழ்த்தப்பட்டுள்ளதால் சாத்தியமானது. செஃப் பழனி முருகன் நம் திருச்சியைச் சார்ந்தவர் எனபது குறிப்பிடத்தகது. 

இந்நிகழ்வு குறித்து பழனி முருகன் அவர்கள் பகிர்ந்து கொள்கையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு உணவு பழக்க வழக்கம் அவசியமானது இன்றைய காலகட்ட தலைமுறைகளுக்கு இந்த சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதற்கான ஒரு புது முயற்சியாக இதைசெய்தோம்.

ஒரு உணவு பழக்க வழக்கம் அழியும் எனில்அதைப் பின்பற்றும் இனமும்  அழியும் என்பார்கள்.

எனவே நம் பாரம்பரியமான உணவு பழக்க வழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாக இதில் ஈடுபடும் இதனுடைய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம் என்றார் .

G-QSXGXN2B7K