திருச்சியில் 3 பிரபலமான உணவகத்தில் சிக்கிய 200 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

திருச்சியில் 3 பிரபலமான உணவகத்தில் சிக்கிய 200 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

திருச்சி மாநகரில் சாஸ்திரி ரோடு மற்றும் தில்லை நகர் பகுதிகளில் உள்ள பிரபல ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன சிக்கன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறியதாவது.... கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக வாடிக்கையாளர்கள் எங்களிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும்,

இது போன்று கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் நலக் கோளாறு ஏற்படும், திருச்சி மாநகரில் தொடர்ந்து அசைவ உணவுக் கடைகளில் சோதனை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய சவர்மா மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision