தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான 40ஆயிரம் சம்பள வேலை வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் அழைப்பு

தற்காலிக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான 40ஆயிரம் சம்பள வேலை வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக அளவிலான நோயாளிகள் மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் மையங்களுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவதால் கூடுதல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களின் அத்தியாவசிய தேவைப்பணியினை கருத்தில் கொண்டு, தகுதி பெற்ற மருத்துவ அலுவலர்கள் (MBBS பதிவு பெற்ற மருத்துவர்) மற்றும் தகுதியுள்ள செவிலியர்கள் (DGNM or BSC Nursing with Nursing Council Registeration ) உள்ளவர்களை மூன்று மாத கால அளவிற்கு தேவைக்கேற்ப தற்காலிகமாக கொரோனா சிகிச்சை வழங்க ஏதுவாக மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நேர்காணல் (Walk-in-interview ) 15.05.2021 தேதியன்று நடைபெற உள்ளது.

எனவே, தகுதியுள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில் கலந்துக்கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்படுகிறது. 

நேர்காணல் நடைபெறும் நாள் : 15.05.2021. நேர்காணல் நடைபெறும் இடம் : திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி.

மருத்துவ அலுவலர்கள் நேர்காணல் நடைபெறும் நேரம் - 15.05.2021 காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை. கல்வித்தகுதி : MBBS from Medical Colleges recognized by Medical Council and duly Registered with TNMC. ஊதியம்
ரூ.60,000

செவிலியர்கள் நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் -  15.05.2021 மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரை. கல்வித்தகுதி : DGNM or B.Sc Nursing with Nursing Council Registration. ஊதியம் - ரூ.14,000

 
குறிப்பு : இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 
எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (Untertaking) அளிக்க வேண்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd