திருச்சியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

திருச்சியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார். தலைமையில் இன்று (11.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவ பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு நேற்று இன்று நாளை என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் "மாபெரும் தமிழ்க் கனவு என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான (03.02.2023) அன்று தொடங்கப்பட்டு (24.04.2023) வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணை கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.

இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது.

எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க இன்று மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு நடைபெற்றது. நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது..

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்ச் கனவு' பரப்புரைத் திட்டம் செயல்படுத்தப்படும். நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள சுல்லூரிகளிலிருந்துமாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்ப்பட்டன.

 இதன் மூலம் குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே இத்திட்டத்தின் இலக்காகும் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 350க்கும் மேற்பட்ட ஆளுமைகளை கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்ப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்த்தும் பேருரை நிகழ்த்துவர்கன். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுனர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமைந்து வருகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வவ்', வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம் தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலேசனை, உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலலைவாய்ப்பு வழிகாட்டி', 'தமிழ்ப் பெருமிதம்' ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. இந்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக தேசிய கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவுநிகழ்ச்சியின் தமிழ்நாடு நேற்று இன்று நாளை என்னும் பொருண்மையில் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கருத்துகளை எடுத்துரைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தேசிய கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் நா.மாணிக்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியின் நடைபெற்ற நிகழ்வில் ஏறத்தாழ 800. மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்ப் பெருமிதம்" சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டன.

 சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மண்ட கல்லூரி கல்வி இணை இயக்குவர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், மாவட்ட மைய நூலக அலுவார் சிவக்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார், தேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.குமார். நிகழ்ச்சி ஒருங்கிணைட்டானர் முனைவர் இரா.ராஜா, அரசுத்துறை அலுவலர்கள், பேராசியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision